தேர்தல்கள் காலம் நெருங்கி வரும் நிலையில் ஆணையம் எடுத்துள்ள அவசர முடிவு
தேர்தலுக்கு தேவையான மை உள்ளிட்ட எழுதுபொருட்களை (Stationeries) அவசரமாக கொள்வனவு செய்ய தேர்தல் ஆணையம் (Election Commission) தீர்மானித்துள்ளது.
குறித்த பொருட்களை விநியோகம் செய்வதற்கான ஏலத்திற்கு நேற்றையதினம் (22.07.2024) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேர்தலில் பயன்படுத்தத் தேவையான அழியாத மை, எழுதுபொருட்கள், பேனா, பென்சில், கார்பன் பேப்பர், இணைப்பு ஊசிகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலத்தொகை
தேசிய போட்டி முறையின் அடிப்படையில் ஏலங்களை ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை திறந்து வைத்து ஏலத்தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்தல் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
