ரணிலுக்காக தீவிர அழுத்தம் கொடுக்கும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரிக்குமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமைக்கு, அந்தக்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
முன்னதாக, தேர்தலுக்கு முன்னதாக ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சியில் விக்ரமசிங்கவும் பொதுஜன பெரமுன தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தமது சொந்த வேட்பாளர்
எவ்வாறாயினும், சில பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரமசிங்கவுக்கு பதிலாக தமது சொந்த வேட்பாளரை முன்னிலைப்படுத்த முயன்று வருகின்றனர்.
இதற்கு மத்தியில், அமைச்சரவை அல்லது இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு தலைமையிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க மற்றும் செஹான் சேமசிங்க ஆகியோர் தமது கட்சியான, பொதுஜன பெரமுன, உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்காவிட்டாலும் விக்ரமசிங்கவுக்கு ஏற்கனவே ஆதரவளித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவும் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகப் பேசியதுடன், பொதுஜன பெரமுனவின் நிபந்தனையற்ற ஆதரவையும் கோரியுள்ளார்.
இதேவேளை விக்ரமசிங்க, தமக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார் எனினும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் இன்னும் அறிவிக்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |