மன்னாரில் அரசாங்க அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட இளைஞர் குழுவின் பணி ஆரம்பம்
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளைக் கடைப் பிடிக்கின்றார்களா? என்பதனை ஆராய்ந்து பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட இளைஞர்களைக் கொண்ட குழு தங்களுடைய பணியை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் குறித்த குழு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம்(25) தமது பணியை முன்னெடுத்துள்ளனர்.
இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பு உடைகளை வழங்கி அவர்கள் மூலம் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் செயல்பாட்டை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தலைமையில் குறித்த பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிட பகுதியில் தமது பணியை முன்னெடுத்துள்ளனர்.
மக்கள் உரிய முறையில் சுகாதார
நடைமுறைகளைப் பின்பற்றுகின்றார்களா?, வர்த்தக நிலையங்களில், பேருந்துகள்
போன்றவற்றில் மக்கள் உரிய சமூக இடை வெளியை பின் பற்றி முகக்கவசம்
அணிந்துள்ளார்களா? என்பதை ஆராய்வதோடு, மக்களுக்கு விழிர்ப்பணர்வை ஏற்படுத்தும்
நடவடிக்கைகளையும் குறித்த இளைஞர் குழுவினர் முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.









இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
