கொழும்பிலிருந்து குஷி நகருக்கான சர்வதேச விமான சேவை ஆரம்பம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பிலிருந்து, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில், குஷி நகருக்கு செல்லும் முதல் சர்வதேச விமானத்தை வரவேற்கவுள்ளார்.
குஷி நகரில் சர்வதேச விமான நிலையத்தை இந்திய பிரதமர் நாளை (20 அக்டோபர் 2021) திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து செல்லும் குழுவில் 100 புத்த பிக்குகள் தவிர 4 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும்,இலங்கையின் மூத்த அதிகாரிகளும் அங்கம் வகிக்கின்றனர்.
குஷிநகர், இந்தியாவின் பௌத்த மையப் புள்ளியாகக் கருதப்படுகின்றது.மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளை கணிசமாக பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் தங்கியிருக்கும் போது இலங்கை பிரதிநிதிகள் வாரணாசிக்கும்
செல்வார்கள். 2021 அக்டோபர் 20 அன்று பிரதிநிதிகளுக்காக காசி விஸ்வநாதர்
கோவிலில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். இதனையடுத்து அவர்கள் 21 அக்டோபர்
2021 பிற்பகல் கொழும்புக்குத் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 50 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
