நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் ஆரம்பம்(Photos)
நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப் பாதுகாப்பினை உறுதிப்பத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்வளர்ப்பு திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பமானது.
தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன், உணவு பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும், கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை வளர்த்தவும், அமைப்புக்களுடன் இணைத்ததான மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் வேலைத்திட்டம் இன்று(19) ஆரம்பமானது.
நன்னீர் மீன் உற்பத்தி
புதுமுறிப்பு நன்னீர் மீன் உற்பத்தி பண்ணையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர், ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நாடளாவிய ரீதியில் இத்திட்டத்திற்காக 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம் நிகழ்வான இன்று 2 லட்சம் மீன் குஞ்சுகள் 5 தொட்டிகளில் விடப்பட்டுள்ளதுடன், ஏனைய 25 தொட்டிகளிலும் வைப்பிட நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.















ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
