மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
கோவிட் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து காரியாலயங்களின் செயற்பாடுகளும் இன்று(29) முதல் மீள ஆரம்பமாகியுள்ளன.
அதன்படி, முன்பதிவு செய்துக்கொண்டு தமக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்பவர்களுக்கு மாத்திரமே சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முன்பதிவு செய்து கொள்வதற்காக 21 17 116 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களும் தமது மாவட்டத்துக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணை மேற்குறிப்பிட்ட எண்ணுக்கு முன்னால் உட்செலுத்தி அழைப்பை மேற்கொள்வதன் ஊடாக முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் சேவையை பெற முன்பதிவு
செய்துக்கொள்ள உள்ளவர்கள் 011 - 21 17 116 என்றவாறு தொலைபேசி இலக்கத்தை
குறிப்பிட்டு அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
