வவுனியாவிலிருந்து ஏனைய மாகாணங்களிற்கு பேருந்து சேவை ஆரம்பம்
வவுனியாவிலிருந்து வெளி மாகாணங்களிற்கான பேருந்து சேவைகள் நாளை (25) காலை முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய தொழில் புரிவோரின் வசதி கருதிக் குறித்த பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் காலை 05.45 மணிக்கு இ.போ.ச வவுனியா சாலையின் பேருந்து வவுனியாவிலிருந்து கண்டி நோக்கிப் புறப்படவுள்ளதுடன், காலை 06.30 மணிக்கு வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படவுள்ளது.
காலை 07.30 மணிக்கு வவுனியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கியும், காலை 07.00 மணிக்குக் கொழும்பு நோக்கியும் பேருந்துகள் புறப்படவுள்ளது.
குறித்த பேருந்துகளில் பயணிப்போர் அத்தியாவசிய சேவைக்குரிய அடையாள அட்டையினை
காண்பித்துப் பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 21 மணி நேரம் முன்

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam
