யாழ். பல்கலையில் தடைகளை தண்டி மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் இராணுவ கெடுபிடிகள் அச்சுறுத்தல்களையும் தாண்டி மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களால் தீபம் ஏற்றி முழந்தாளில் நின்று மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இவ் மாவீரர் நிகழ்வுகளுக்கு தடைகள் போடுமுகமாக, இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தமையை அவதானிக்க முடிகிறது.
மாவீரர் தின நிகழ்வு தாயகத்தில் மாத்திரமல்லாது புலம்பெயர் தேசங்களிவும் உணர்வுரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக சூழலில் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு வழமையை விட கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகமாக இருக்கின்ற நிலையில் மாணவர்கள் தமது ஆத்மார்த்தமான கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
இன்று காலை பல்கலைக்கழக வேலை நாளாக இருந்தாலும் பல்கலைக்கழக நிர்வாகம்
பல்கலைக்கழக கதவுகளைப் பூட்டிய வண்ணம்
இயங்கியமை குறிப்பிடத்தக்கது.







தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
