தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை சிறப்பாக நடத்த ஏற்பாட்டுக் குழு நியமனம்
எந்த நோக்கத்திற்காக தியாக தீபம் திலீபன் தன்னுடைய உயிரை தியாகம் செய்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான ஒரு தளமாக இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
நல்லை ஆதீனத்தில் நேற்று (19.09.2022) இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
மக்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து நினைவேந்தலை சிறப்பாக செய்வது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வு
இதன்போது நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஏற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டுக் குழுவில் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழுவினை ஏற்பாடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri