தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்(Photos)
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவேந்தல் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், 'பார்த்தீபன் இன்னமும் பசியோடு இருக்கின்றான்' என்ற உணர்வினை நெஞ்சினில் தாங்கியவாறு தியாக தீபம் திலீபனின் நினைவிருத்தி விளையாட்டு வீரர்கள் பலர் பிரித்தானியாவில் ஆடுகளங்கண்டுள்ளனர்.
விளையாட்டு போட்டிகள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு துறை அமைச்சினால், 7வது தடவையாக விளையாட்டு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் நீதிராசா தலைமையில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்த விளையாட்டு போட்டியில் பிரித்தானியாவின் பல கழகங்கள், குழுக்கள் பங்கெடுத்து வெற்றிகளை தமதாக்கி கொண்டுள்ளனர்.
திலீபனுக்கு அஞ்சலி
இதன்போது, கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் சிறப்புடனும் பிரமாண்டமாகவும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.












தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 16 மணி நேரம் முன்

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan
