உயிர்நீத்த தியாகதீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவேந்தலின் நான்காவது நாள் (PHOTOS)
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவேந்தலின் நான்காவது நாள் இன்றையதினமாகும்.
யாழ்.பல்கலைக்கழகம்
இந்நிலையில், தியாக தீபம் திலீபனின் நான்காவது நாள் நினைவேந்தல் யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
இதன் பொழுது ஈகைச் சுடரேற்றப்பட்டு தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் பொழுது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்- நல்லூர்
யாழ்ப்பாணம்- நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலும் நான்காம் நாள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் தவபாலனின் சகோதரர் ஜெயபாலனால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

- வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்,
- சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்,
- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்,
- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்
என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிரிழந்தார்.

மேலதிக செய்தி: தீபன்
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri