திருகோணமலை குமாரபுரம் பகுதியில் மனிதப் படுகொலைகள் நினைவு நாள் அனுஷ்டிப்பு (video)
திருகோணமலை -மூதூர் - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் நினைவு நாள் இன்று (11.02.2023) குமாரபுரம் மக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மனித படுகொலை
இந்த மனித படுகொலை நடந்து இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நீதி கோரிய மக்கள்

அத்துடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொடூர சம்பவம் (1996.02.11)ஆம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.
இந்நினைவு நாளை கிராம மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் இளைஞர் இணைந்து அனுஸ்டித்திருந்தனர்.
இதன்போது உறவுகளை இழந்தவர்கள் கதறி அழுது இலங்கை
அரசிடமும் சர்வதேசத்திடமும் தங்களுக்கான நீதியை கோரினார்கள்.










வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri