தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்ட குருந்தூர்மலைக்கு வாருங்கள்: அமலன் அழைப்பு
பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரலாற்று சிறப்பு மிக்க வன்னி பெரும் நிலபரப்பிலே தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது.
ஆலய பரிபாலன சபையினர் தீர்மானம்
கடந்த சில காலங்களாக முரண்பாடுகள் காரணமாக பொங்கல் நிகழ்வை சிலர் குழப்பியிருந்தார்கள். இருப்பினும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வினை எவ்வித இடையூறும் இல்லாது நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய இருப்பையும் , தொன்மையையும் , பாரம்பரிய வழிபாட்டு முறையான பொங்கல் நிகழ்வினை நடத்துவதற்கு ஆலய பரிபாலன சபையினர் தீர்மானித்துள்ளனர்.
எனவே தாயக பிரதேசத்திலே வாழுகின்ற அனைத்து தமிழ் உறவுகளும் அதாவது வன்னி பெருநிலப்பரப்பிற்கு அப்பால் வடக்கு கிழக்கிற்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும் தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் அனைவரையும் வருகைதருமாறும் அழைத்து நிற்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening