எரிவாயு நிறுவன தலைவர்களை தேடும் இலங்கை அரசாங்கம்
இலங்கையில் தற்போது நிலவி வரும் பிரச்சினை தொடர்பில், இரண்டு எரிவாயு நிறுவனங்களின் தலைவர்களும், உயரதிகாரிகளும் தமது பதுங்கிடங்களில் இருந்து வெளியே வந்த பொதுமக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தவேண்டும் என்று அரசாங்க கட்சி பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கோரியுள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர், எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகளும் தலைவர்களுமே எரிவாயு பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டிய பொறுப்பைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
எரிவாயு நிறுவனத்தின் தலைவர்களை தொடர்புகொள்ளமுடியவில்லை என்று ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை பார்த்ததாக குறிப்பிட்ட அவர், நிறுவன தலைவர்கள், பதுங்கியிருப்பதில் பயனில்லை என்று குறிப்பிட்டார்.
அவர்கள் தமது பதில்களுடன் வெளியே வரவேண்டும் என்று ஜோன்ஸ்டன் குறிப்பிட்டார்.
மோசடி தொடர்பாக நிறுவனம் ஒன்றின் தலைவர் கருத்துரைத்தபோதும் அவரையும் வெளியில் காணமுடியவில்லை.
எனவே ஊடகங்களுக்கு உள்ளேயிருந்து தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்காமல், மக்களுக்கு சேவையாற்ற அவர்கள் முன்வரவேண்டும்.
இதனை விடுத்து அவர்களின் பொறுப்பற்ற செயல் மக்களையும் அரசாங்கத்தையும் கஸ்டநிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் குற்றம் சுமத்தினார்





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam

விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri

மாறுங்கள், இல்லையென்றால்... இங்கிலாந்து மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை News Lankasri
