கொழும்பில் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்ய முயற்சி
கொழும்பு, தெமட்டகொட லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு கடுமையான வெட்டுக் காயங்கள் ஏற்படுத்திய நிலையில் படுகொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 05 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர் கொழும்பு 08, வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர்.
சந்தேக நபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |