கொழும்பில் 2 பெண்களுக்காக மோதிக் கொண்ட இளைஞர்களால் பரபரப்பு
கொழும்பிலுள்ள இரவு விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த 2 யுவதிகளை பகிர்ந்துக் கொள்ள முயற்சித்த இளைஞர்களால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
கண்டி மற்றும் கொழும்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் குழுக்கள் மோதிக் கொண்டதில் கொழும்பைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காயமடைந்து அவர்களில் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதலின் பின்னர் தப்பிச் சென்ற கண்டி இளைஞர்கள் குழுவை கைது செய்ய குருந்துவத்தை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இவ்விரு யுவதிகளும் பேலியகொட மற்றும் ராஜகிரிய பிரதேசங்களில் இருந்து இந்த இரவு விடுதியில் நடனமாடுவதற்காக அடிக்கடி வந்து செல்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் இரவு முதல் மறுநாள் வரை பல்வேறு இளைஞர்களுடன் நெருக்கமாக நடனம் ஆடுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கண்டியை சேர்ந்த இளைஞர்கள் குழு இந்த யுவதிகளை தங்களுடன் நடனத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்த போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
