புற்று நோயுடன் சிறையில் வாடும் அரசியல் கைதி! ரணிலை கடுமையாக சாடிய சாணக்கியன்(Video)
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதுடைய முதியவர் ஒருவர்,15 வருடங்களாக சிறையில் இருக்கிறார். அவருக்கு கூட மனிதாபிமான அடிப்படையில் விடுதலை கொடுக்க தவறிய ரணில் இன்று தமிழ் தரப்புடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தி வெறும் நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு-வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கு சென்று நீண்ட காலமாக சிறையில் அடைத்து வைத்திருக்கு அரசியல் கைதிகள் மற்றும் அண்மையில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளரையும் நேற்று(05.06.2023) சந்தித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு செல்லும் போது அவர் அதை செய்யலாம் இதை செய்யலாம் என கூறுகின்றார். ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு விடயமும் கையில் கிடைக்கவில்லை.
இந்த அரசியல் கைதிகளுக்கான விடுதலையும் இன்னும் கிடைக்கவில்லை.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
