திருமணம் ஒன்றினால் கொழும்பு நீதிமன்றத்தில் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளுக்காக வந்த மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
நீதிமன்ற தட்டச்சர் ஒருவரின் திருமண வைபவம் காரணமாக இலக்கம் 06 பிரிவு மூடப்பட்டிருந்தமையே இந்த சிரமத்திற்கு பிரதான காரணமாகியுள்ளது.
நீதிமன்றத்தில் பணிபுரியும் அத்தனை பேரும் தட்டச்சரின் திருமண விழாவில் கலந்து கொண்டதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
சம்மந்தப்பட்ட நீதிமன்ற மண்டபத்திற்கு முன்பாக, “இன்று நீதிமன்ற உத்தரவுப்படி பிணை கோரல் மனு வழக்குகள் இன்று நீதிமன்ற எண் 06ல் அழைக்கப்படாது என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஒட்டப்பட்டிருந்ததனையும் காண முடிந்துள்ளது.
இது தொடர்பில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் பிரதான பதிவாளரிடம் வினவிய போது, நீதிமன்ற இலக்கம் 6 இன் ஊழியர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றிருந்தது தனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக மனுக்களை காலை 09 மணிக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும், ஆனால் இந்த நிலை காரணமாக வழக்கறிஞர்களுக்கு நேற்று காலை 11 மணி வரை மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.




