கொழும்பில் பாதாளக்குழுக்களின் பங்கேற்புடன் 25 இலட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட நிகழ்வு - சீஐடியினர் கண்டுபிடிப்பு
கொழும்பில் பாதாள உலகக்குழுக்களின் பங்கேற்புடன் 25 இலட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட பிறந்த நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை புலனாய்வுப்பிரிவினரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பிரபல பாதாள உலகக் குற்றவாளியாக கருதப்படும் பொடி லேசியின் பிணை மற்றும் அவரது தாயாரின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அம்பலாங்கொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாதாள உலக முக்கியஸ்தர்கள் பலரின் பங்குபற்றுதலுடன் பிரமாண்ட விருந்து நடத்தப்பட்டதாக புலனாய்வு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
25 இலட்சம் ரூபா செலவில் பிறந்த நாள்
இந்த விருந்திற்காக 25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொடி லேசி என்ற பாதாள உலக குற்றவாளி பூஸா உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பிணை வழங்கப்பட்டாலும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்றி இன்னும் சிறையில் இருந்து வெளியே வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், விருந்து தினத்தன்று, சிறையில் இருந்து பொடி லேசி புகைப்படம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி, பொடி லேசியின் தாயாருக்கு பிறந்த நாள் பரிசாக 15 பவுன் தங்க நகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
