கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹற்றன் பகுதியில் வாழும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், வான் சாரதியான தமிழரும் முச்சக்கரவண்டி சாரதியான சிங்களவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வேகமாக வந்த பஸ் குறித்த வான் மீது மோதியமையால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா நோக்கி பயணித்த வானில் ஹற்றன் பகுதியை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர் இவர்களில் கணவன், மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகளுடன் ஆண் பிள்ளை ஒன்றுமாக 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

விபத்தில் வான் சாரதியான தமிழ் இளைஞரும் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றும் இந்த கூட்டு விபத்தில் சிக்குண்டுள்ள நிலையில் அதன் சாரதியான சிங்கள இளைஞர் ஒருவரும் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார்.
பஸ் வண்டியை செலுத்திய சாரதியின் கவனமின்மையே இந்த கோர விபத்துக்கு காரணமென விபத்தை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri