கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து விபத்து! 10 பேர் படுகாயம்
புதிய இணைப்பு
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் பலர் காயமடைந்து செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மன்னார் முருங்கன் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி பெரியகட்டு பகுதியில் சொகுசு பேருந்தொன்று இன்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன் இதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள்
வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




