கொழும்பு - யாழ்ப்பாண தொடருந்து சேவை பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கான நேரடி தொடருந்து சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை - காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி தொடருந்து சேவை அநுராதபுரம் தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.

யாழ். ராணி தொடருந்து சேவை
எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி தொடருந்து சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான தொடருந்து சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை நேரடி தொடருந்து சேவை
எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான தொடருந்து மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை நேரடி தொடருந்து சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam