கொழும்பில் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர் : நவீனமுறையில் மிரட்டல்
கொழும்பில் அதிநவீன கருவியை பயன்படுத்தி பணப்பை திருடும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிநவீன சாதனம் வலது கையில் அவரது விரலில் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.
பயணப் பொதி
மேலும் அதில் மூன்று வெவ்வேறு வகையான கூர்மையான கத்திகள் இணைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணப்பைகள், பெண்களின் கைப்பைகள், பயணப் பொதிகளில் இருந்த பணம் போன்ற பெறுமதியான பொருட்கள் அந்த சாதனத்தைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கு இடமின்றி திருடப்பட்டுள்ளதாக சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan