கொழும்பு பங்குச்சந்தையின் மிதமான எதிர்மறை வர்த்தகம்
கொழும்பு பங்குச் சந்தையின், குறுகிய நாட்களைக் கொண்ட, இந்த வாரத்தின் வர்த்தகம், மிதமான எதிர்மறை பரிமாற்றத்துடன் முடிவடைந்தது.
இதன்படி இன்று அனைத்து பங்கு விலைக் குறியீடு 9.31 புள்ளிகள் சரிந்து 15,616.57 இல் முடிவடைந்தது, அதேபோன்று S&P - SL20 குறியீடு 0.44 சதவீதம் சரிந்து 4,624.24 இல் நிறைவடைந்தது.
வர்த்தக அமர்வு
இன்றைய வர்த்தக அமர்வில் திடீர் அசைவுகள் ஏற்பட்டன.
இதன்படி சந்தை இன்று காலை வலுவான நிலையில் ஆரம்பித்தது முதல் அரை மணி நேரத்தில் 35 புள்ளிகளுக்கு மேல் பரிமாற்றங்கள் அதிகரித்தன.
எனினும் பின்னர் பரிமாற்றங்கள் எதிர்மறைக்கு சென்றன.
நேர்மறையான தாக்கம்
குறிப்பாக, உள்ளூர் பால் பொருட்களுக்கு அரசாங்கம் ஏயுவு விலக்குகளை அறிவித்தமையானது, சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது, அதிகபட்ச தனிநபர் விற்பனை சம்பத் வங்கி பிஎல்சி இலிருந்து 82.72 மில்லியன் ரூபாய்களாக அமைந்திருந்தது.
இந்தநிலையில், விடுமுறை காலம் முடிவுக்கு வந்து, புதுப்பிக்கப்பட்ட முதலீட்டாளர் ஆர்வத்துடன் சந்தை புதிய ஆரம்பத்துக்கு தயாராகி வருவதால், எதிர்வரும் வாரத்தில், கொழும்பு பங்குச்சந்தை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
