கொழும்பில் துப்பாக்கி சூடு:சிசிரிவி கமராவால் வெளிவந்த தகவல்கள்
கொழும்பு-ஜம்பட்டா வீதி பொலிஸ் காவல் அரணுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில் அந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூஹாம் சதுக்கத்தில் நேற்று(25.02.2024) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மொஹமட் ரில்வான் என்ற 55 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார்.
பொலிஸாரின் சந்தேகம்
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் பிரபல போதைப்பொருள் வியாபாரியான புக்குடு கண்ணாவுடன் நெருங்கிய தொடர்புடையவர் என தற்போது தெரியவந்துள்ளது.

புக்குடு கண்ணாவுக்கும் குடு செல்வியின் மகன் ரிமோஷனுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் தகராறே துப்பாக்கி சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் கோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி சுட்டை நடத்திவிட்டு தப்பிச் செல்வது அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri