கொழும்பை சேர்ந்த நபர் திருகோணமலையில் கைது
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோயிலடி பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 30.7 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
கைது செய்யப்பட்டவர் கொழும்பு, குணசிங்கபுரவை சேர்ந்த 63 வயதான நபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று(18) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri