தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீதான தாக்குதலுக்கு சஜித் கண்டனம்
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதன் காரணமாக சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சஜித் கண்டனம்
இந்நிலையில் குறித்த தாக்குதல் ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ட்விட்டர் செய்தியொன்றில் கண்டனம் தெரிவித்துள்ளார் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
எந்தவொரு தலைவரோ அல்லது கட்சியோ ஒட்டுமொத்தமாக சரியான வழியில் சென்றதில்லை. அதன் காரணமாகவே ஜனநாயகத்தில் எதிர்க்குரல்களுக்கு இடமளிக்க வேண்டியுள்ளது.
இன்று தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், ஏராளமானவர்களுக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மீதான அரசாங்கத்தின் அச்சுறுத்தல் அதன் மூலம் வெளிப்படுகின்றது.
பொதுமக்கள் அமைதியாக ஒதுங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புவதைப் போன்று தெரிகின்றது என்றும் சஜித் பிரேமதாச தனது கண்டனச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
