கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் : தயார் நிலையில் நீர்த்தாரைப் பிரயோக வண்டிகள்(Video)
புதிய இணைப்பு
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டெலிகொம் ஊழியர்கள் பேரணியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.
எனினும், பொலிஸார் இடைமறித்ததன் காரணமாக டெலிகொம் அலுவலகத்தைச் சுற்றி பேரணியாக செல்வதுடன், ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி அவர்கள் செல்லலாம் என்ற காரணத்தினால் ஜனாதிபதி அலுவலகத்திற்கான பாதைகளில் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நீர்த்தரைப் பிரயோக வண்டிகள் தொடர்ந்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்பு தெரிவித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
டெலிகொம் வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் தற்போது கொழும்பில் உள்ள டெலிகொம் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வருகின்றது.
இதன்போது, ஊழியர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களது வரப்பிரசாதங்கள் அவர்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதேவேளை, போராட்டக்களத்தில் பெருமளவான பொலிஸார், கலகத் தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரையான நாட்டின் அனைத்து பாகங்களிலும் பணியாற்றும் டெலிகொம் ஊழியர்கள் வருகைத் தந்துள்ளனர்.













950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
