கொழும்பு துறைமுக நகர யோசனை தொடர்பிலான வாக்கெடுப்பு தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்களிப்பின் போது முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை வேண்டும் என்று பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற இரண்டாவது வாசிப்புக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட முடிவில் இரண்டு வாக்குகள் சேர்க்கப்படவில்லை என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
யோசனையின் இரண்டாவது வாசிப்பின்போது 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், 59 பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
இருப்பினும், அமைச்சர் அலி சப்ரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரத்ன ஹேரத்
ஆகியோரின் வாக்குகள் இதில் சேர்க்கப்படவில்லை என்று காரியவசம்
குறிப்பிட்டுள்ளார்.