கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிப்பு
கொழும்பு துறைமுக விசேட பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.
அந்த ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பிரியத் பந்து விக்ரம, ரொஹன் டி சில்வா, குஷான் கொடித்துவக்கு, சாலிய விக்ரமசூரிய, ஜேராட் ஒன்டச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த மே 27ஆம் திகதி கையெழுத்திட்ட நிலையில், கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவை அமைக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் 148 வாக்குகள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட நிலையில், 89 மேலதிக வாக்குகளினால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.