கொழும்பு துறைமுக நகருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச்செல்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கேள்வி
கொழும்பு போட் சிட்டி என்ற துறைமுக நகருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச்செல்ல சீனாவின் தூதரகத்துக்கு உள்ள உரிமைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகருக்கு இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச்செல்லும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வின் பின்னர் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இதனை சீனத் தூதரகமே ஏற்பாடு செய்திருந்ததாக குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தை சீனத் தூதரகம் அல்ல. நகர அபிவிருத்தி சபையே ஏற்பாடு செய்திருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சொத்து ஒன்றை பார்வையிட சீனா தூதரகம் ஏற்பாடுகளை செய்வதற்கான உரிமைக் குறித்து ராஜகருணா கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam