கொழும்பில் தீவிர அரசியல் அதிகார முறுகல்! எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் பண்டாரநாயக்க குடும்பத்துக்குள் கொண்டு வரும் முயற்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வெளியிட்டுள்ள கருத்துக்கள் அமைந்துள்ளமையை ஊடகத்ததரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பண்டாரநாயக்க பரம்பரைக்கு சொந்தமான கட்சியாகும்.
அதனை ராஜபக்சர்களின் ஆளுகைக்குள் விடமுடியாது.
இதன் காரணமாகவே அவர்கள் மொட்டு கட்சியை உருவாக்கியுள்ளதாக குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து கணிசமானோர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீட்கும் அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பொதுஜன முன்னணியில் உள்ள முக்கிய உறுப்பினர்களும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம் மைத்திரிபாலவின் தலைமையை விரும்பாத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் இந்த அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதனையடுத்து தேசிய ரீதியில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் சக்தி ஒன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகள், திரை மறைவில் மேற்கொள்ளப்படுவதாக ஊடகவியலாளர்கள் தரப்புகள் தெரிவிக்கின்றன.
மறுபுறத்தில் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத பொதுஜன முன்னணியினர் ஏனைய கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 20 நிமிடங்கள் முன்
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri