ரணிலின் நடவடிக்கையால் கொழும்பு மக்கள் எதிர்கொண்டிருக்கும் பாரிய அச்சுறுத்தல்
தற்போது கொழும்பில் இருப்பவர்கள் தங்களது உரிமைகளை பாதிக்கும் இராணுவமயமாக்கலை, அச்சுறுத்தலையும் உணரக்கூடியதாக இருக்கின்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பின் பல இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த முடிவிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
யுத்தத்தின் பின்னரான இராணுவத்தின் தலையீடு
இந்த நிலையில் இது குறித்து அம்பிகா சற்குணநாதன் மேலும் குறிப்பிடுகையில்,
இராணுவ மயமாக்கல் என்பது இலங்கைக்கு புதிதான விடயம் அல்ல, ஏனென்றால் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலத்தில் யுத்த காலத்தில் இருந்ததை விட இராணுவ மயமாக்கல் அதிகரிக்கப்பட்டது.
இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவது, பாரிய விவசாய பண்ணை நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று பல பல விடயங்களில் இராணுவத்தின் தலையீடு இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
