கொழும்பில் இருந்து சுற்றுலா சென்ற பேருந்து விபத்து! மேலும் இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில்
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு விபத்தில் காயமடைந்தவர்களில் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களும் அடங்கியுள்ளதாகவும்,காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்று மாலை, கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இதன்போது, வானில் பயணித்த 9 பேரில் ஆறு பேரும் முச்சக்கர வண்டி சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் நானுஓயா பகுதியில் சுயதொழில் ஈடுபடும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 13 வயது சிறுவன், 26 மற்றும் 27 வயதுடைய 3 ஆண்கள், 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 43 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.