கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய மோசடியை அரச கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன அம்பலப்படுத்தியுள்ளார்.
அதன்படி தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் பெருமளவிலான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள், சுமார் 9 மில்லியன் ரூபா பெறுமதியானவை எனவும் அரச கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
உண்மைகளை வெளிக்கொணரும் பணி
நாடாளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூட்டத்தின் போதே கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்கிரமரத்ன இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
எனவே, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணரும் பணியைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |