சர்ச்சையை ஏற்படுத்திய இளம் பெண் மரண விவகாரம்! கொழும்பு வைத்தியசாலை எடுத்துள்ள நடவடிக்கை
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் Properfol எனும் மயக்க மருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கொஸ்கொட பொரலுகட்டிய தெற்கில் வசிக்கும் எச்.ஜி. ஹிமாலி பிரியதர்ஷினி வீரசிங்க என்ற 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
கொழும்பு கண் வைத்தியசாலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கண்வில்லையை பொருத்துவதற்கான சத்திரசிகிச்சையொன்றுக்கு குறித்த பெண் உட்படுத்தப்பட்டிருந்தார்.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இதனை தொடர்ந்து கண்வில்லை முறையாக பொருந்தவில்லை எனவும், இதன் காரணமாக உடனடியாக மீண்டும் சத்திரசிகிச்சையொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இதன்போது சத்திரசிகிச்சைக்காக தேசிய கண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு Properfol எனும் மயக்க மருந்து வழங்கப்பட்ட நிலையில், மயக்க மருந்தில் சுயநினைவை இழந்து விஷம் கலந்து அவர் உயிரிழந்திருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
