ட்ரம்புடன் பேசிவிட்டு திரும்பிய செலன்ஸ்கிக்கு புடின் கொடுத்த பேரதிர்ச்சி
ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் யுத்தமாக கருதப்படுகின்ற உக்ரைன் - ரஷ்யா போர் முடிவை நோக்கி செல்வதாக செய்திகள் நாளுக்கு நாள் வெளிவருகின்றன.
எனினும், முழுமையான சமாதானத்தை அடைவதற்காக இரண்டு நாடுகளும் ஏனைய உலக நாடுகளுடன் சேர்ந்து வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில் நடந்த ட்ரம்ப், புடின், ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் உடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மிக நேர்த்தியாக நடைபெற்றன.
இதன்போது, டொனால்ட் ட்ரம்ப், தனது வழக்கமான நக்கல் நையாண்டி பேச்சுக்களை கைவிட்டு அமெரிக்கா போன்றதொரு நாட்டின் ஜனாதிபதியாக நடந்துகொண்டார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் தனது வழக்கமான இராணுவ சீருடையை விட்டு அமெரிக்கர்கள் விரும்பும் ஆடையை அணிந்து பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தார்.
இந்த சமாதான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே உக்ரைனின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது என்பதே யதார்த்தம் ஆகும்.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது எமது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




