கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதிவான கொடூரம் : விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல் (Video)
கொழும்பு - புறநகர் பகுதியான வத்தளை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து இன்று(29) காலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சேனபர ஹெட்டியாராச்சி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல்
அந்த விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று இந்த கொலையை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அத்தோடு, கொலை செய்யப்பட்ட நபர் அந்த விடுதியின் ஊழியர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, முச்சக்கரவண்டியொன்றில் ஐந்து பேர் கொண்ட மர்ம குழுவினர் தனியார் விடுதிக்கு வந்துள்ளமை பாதுகாப்பு கமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கமராக்களின் மூலம் முச்சக்கர வண்டியொன்றினால் தனியார் விடுதிக்கு வந்த 5 பேர் கொண்ட ஒரு குழுவினரால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை மற்றும் களனி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
