அநுரவின் சூழ்ச்சியால் பறிபோன கொழும்பு மாநகர சபை
தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சதியாலேயே கொழும்பு மாநகர சபையை அவர்கள் கைப்பற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தியே கைப்பற்றியிருக்க வேண்டும். 60 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் ரிஸா சரூக்குக்கு ஆதரவு வழங்குவோம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் தந்திருந்தனர்.
சதி
ஆனால், ஜேர்மனியிலிருந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடு திரும்பிய கையுடன் கொழும்பு மாநகர சபைக்குள் தலையிட்டு ஏற்படுத்திய சதியால் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஜனாதிபதியின் தலையீட்டினால்தான் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியே கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியிருக்கும். இது எமக்குத் தோல்வி அல்ல. சதியால் 7 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
ஜனாதிபதியின் சதியால் கொழும்பு மாநகர சபையின் மேயராக வந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வ்ராய் கெலீ பல்தசாருக்கு வாழ்த்துக்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri