முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமவுக்கு விளக்கமறியல்
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த கஹந்தகமவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று(12.10.2026) வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
இதற்கமைய, மகிந்த கஹந்தகமவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்ற தகவலுக்கமைய மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையின் போதே அவர் ஐஸ் போதைப்பொருளுடன் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மகிந்த கஹந்தகமவை இந்த மாதம் 12ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam