மக்களிடம் கொழும்பு வியாபாரிகள் சம்மேளனம் வைத்துள்ள கோரிக்கை
நாட்டில் பிரதான நகரான கொழும்பில் நாளொன்றுக்கு 4, 5 ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்ற நிலையில் சுமார் 20 நாட்களின் பின்னர் 600ற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு வியாபாரிகள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சமிந்த விதானகமகே தெரிவித்துள்ளார்.
எனவே கடவுளின் நாமத்தில் கேட்கின்றோம், தயவு செய்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள் என நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கோவிட் வரைஸ் காரணமாக கடந்த 2 வருடங்களாக எமது நாட்டில் வியாபார நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.
இலங்கையில் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் நாடு முழுவதும் பூட்டப்பட்டிருந்த காலத்தில் சில வியாபார நிறுவனங்கள் 100% விழுந்துவிட்டது.
தற்பொழுது இந்த கோவிட் அச்சத்தில் இருந்து மீண்டு நாட்டை திறந்து வியாபாரங்களை நடத்தி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எம்முடைய வியாபாரங்களை உயரத்திக்கொள்ள நாம் நல்ல விதமாக எதிர்பார்த்துள்ளோம்.
இந்த நாட்டில் வியாபாரிகள் தான் முதலீடுகளை செய்துள்ளார்கள். எங்களுடைய வீடு, காணி என அனைத்தையும் வங்கிகளில் வைத்து அந்த பணத்தில் தான் வியாபாரங்களுக்கு முதலீடு செய்துள்ளோம். இதில் எமக்கு மாத சம்பளம் கிடைக்காது.
மாறாக நாம் இலாபத்தை அடைந்தால் தான் வங்கி கடன்களை செலுத்த முடியும், லீசிங் தவணை பணத்தை செலுத்த முடியும். சேவையாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டும். அதே போல் கட்டட வாடகை செலுத்த வேண்டும். இப்படியான நிறைய விடயங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது.
வருமானம் இல்லாமல் போனால் எமக்கு இவற்றை செய்வது மிகவும் கடினம். இப்படியிருந்தும் நாம் ஆர்ப்பாட்டங்களுக்கோ, வேலைநிறுத்தத்திற்கோ சென்று எம்முடைய உரிமைகளை கேட்கமாட்டோம்.
நாம் எந்தநேரமும் பார்ப்பது புதிதாக ஒன்றை செய்து எம்முடைய வியாபாரங்களை கட்டியெழுப்பக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதையே நாம் பிரதானமாக பார்க்கின்றோம்.
இதைத்தான் அனைத்து வியாபாரிகளும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் நாட்டில் இன்று விவசாயிகள், ஆசிரியர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் பிரதான நகர் கொழும்பில் நாளொன்றுக்கு 4,5 ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றது. கொழும்பிற்கு வெளியேயும் அதே போல் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றது.
இந்த நிலையில் சுமார் 20 நாட்களின் பின்னர் 600ற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடவுளின் நாமத்தில் கேட்கின்றோம் தயவு செய்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள்.
மீண்டும் இந்த கோவிட் தலைதூக்கினால் மீண்டும் நாட்டை மூட வேண்டிய நிலை ஏற்படும்.
நீங்கள் சொல்கின்றீர்கள், பொருட்களின் விலைகள் அதிகம், எரிவாயு விலை அதிகம், அரிசி விலை அதிகம் என்று, உண்மையிலே இப்படி விலைகள் உயர்வதற்கு யார் காரணம்? விலைகள் உயரவும் நாம் தான் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
