வேட்பாளர் குறித்து ஹிருணிகாவின் கூற்றை மறுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்
எரான் விக்ரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கொழும்பு மேயர் வேட்பாளர் அல்ல என அக்கட்சியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எல்லை மீறும் அர்ச்சுனா எம்.பியின் வார்த்தை பிரயோகம்! இரு சமூகங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எரான் விக்ரமரத்னவே கொழும்பு மேயர் வேட்பாளர் என்று எஸ்.ஜே.பி உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியுள்ள நிலையில் அத்தகைய முடிவு எதுவும் இல்லை என்று நிரோஷன் கூறியுள்ளார்.
கொழும்பு மேயர் வேட்பாளர்
இதேவேளை மூன்று முக்கிய உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இருந்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
எரான் போட்டியிடக்கூடும் என்று ஹிருணிகா நினைத்திருக்கலாம். ஆனால் எரான் இந்தப் பதவிக்குப் போட்டியிட மாட்டார்.
அவருக்கு எஸ்.ஜே.பி.யுடன் இணைக்கப்பட்ட மிக முக்கியமான பொறுப்புகள் உள்ளன என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட்டு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று நிரோஷன் தெரிவித்துள்ளார்.