பதவி விலகும் சஜித் அணியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்
கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானைக் களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (14.01.2023) கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முஜிபுர் ரஹ்மான் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற வெற்றிடம் யாருக்கு?
முஜிபுர் ரஹ்மான் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவருடைய நாடாளுமன்ற ஆசனம் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த வரிசையில் இருக்கும் ஏ.எச்.எம்.பௌசி அல்லது ஹிருணிகா பிரேமச்சந்ரவால் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
