வீடற்ற 18 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1 கோடி ரூபாய்! வெளியானது கணக்காய்வு அறிக்கை
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் வீடுகள் கிடைக்காத 18 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோடியே பதினாறு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்தம் செலுத்தப்படும் தொகை
இந்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் பத்து உறுப்பினர்களுக்கு அறுபத்தேழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும், கடந்த ஆண்டு எட்டு உறுப்பினர்களுக்கு நாற்பத்தெட்டு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் வீடு கிடைக்காத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் செலுத்தப்படும் தொகை 75000 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடப்பிரச்சினை காரணமாக எம்.பி.க்களுக்கு மதிவெல உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடுகளை வழங்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமற்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல உத்தியோகபூர்வ வீடமைப்புத் தொகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
