ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு (Video)
ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்களுடன் நடத்திய சந்திப்பின் பின்னர், வைத்தியசாலை பணிகள் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளரான வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (19.07.2023) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தப் போராட்டம்
வைத்தியசாலைப் பணிப்பாளர் பிரச்சினைக்குத் தீர்வுகாணத் தவறியமையினால் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் இப்பிரச்சினையைச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கொண்டு செல்ல நேரிட்டதாகவும் அதற்காக ஒரு வார கால அவகாசம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை இப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படவில்லை எனவும், இதனால் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளது.
வேலைநிறுத்த போராட்டம்
இருப்பினும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஜி.விஜேசூரிய இந்த வேலைநிறுத்தம் குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
