கொழும்பு- கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு- கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பை ரத திருவிழா நடைபெற்றுள்ளது.
பங்குனித்திங்கள் 9ஆம் நாளான இன்றைய தினம் (22.03.2024) பிரதோஷ அபிஷேகம் நடைபெற்று சப்பை ரதத் திருவிழாவும் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இரதோட்சவமானது, நாளையதினம் நடைபெறவுள்ளது.
இரதோற்சவம்
கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
9 நாட்கள் தொடர்ந்து மகோற்சவ பெருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் நாளைய தினம் காலை 7 மணியளவில் சித்திரத்தேரில் விநாயகர் ஸ்ரீசோமஸ்கந்த மூர்த்தி அம்பாள், முருகன், சண்டேஸ்வரர் மூர்த்திகளும் ஆரோகணித்து இரதோற்சவம் நடைபெறவுள்ளது.
மேலும், பங்குனி உத்தர திருநாளான நாளை மறுதினம் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.