கொழும்பு- கண்டி இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
கொழும்பு- கோட்டையிலிருந்து பேராதெனிய ஊடாக கண்டி வரையிலான தொடருந்து சேவைகள் அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக திணைக்களத்தின் பிரதம பொறியாளர் பிரியந்த திகலா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரம்புக்கானைக்கும் கடுங்கன்னாவைக்கும் இடையிலான தொடருந்து பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன.
இதனையடுத்து, குறித்த வழித்தடத்தில் தொடருந்து போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புனரமைப்புப் பணிகள்
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதம பொறியாளர் பிரியந்த திகலா, தொடருந்து ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையினாலேயே இந்த புனரமைப்புப் பணிகள் விரைவாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கப்பட்டு முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாகப் பாராட்டினார்.
அத்துடன் எஞ்சியுள்ள சிறு புனரமைப்புப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, எதிர்வரும் மாதத்தில் கொழும்பு - கண்டி இடையிலான தொடருந்து சேவைகள் மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening