பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல்: பேருந்து சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேருந்து சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கம்பஹா - கொழும்பு மற்றும் கொழும்பு - கண்டிக்கு இடையில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகள் என கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு சாரதிகளும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வீதியில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதால் பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதன்படி கிரில்லவல பிரதேசத்தில் இரண்டு பேருந்துகளையும் பொலிஸார் நிறுத்தி சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை பொலிஸ் காவலில் எடுத்துக்கொண்டதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அர்ஜுன கொடிகாரவின் பணிப்புரைக்கு அமைய, கடவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குமார ஹெட்டியாராச்சி தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam