கொழும்பு வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மற்றுமொரு மரணம்! உடனடியாக நிறுத்தப்படும் தடுப்பூசி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருப்பினும் குறித்த நபர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் நாளை (27) விசாரணை நடத்தப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அதுவரை குறித்த தடுப்பூசியை நோயாளர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் வெட்டுக்காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இதனை தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெட்டு காயத்திற்காக "Co-Amoxi-Clove" எனும் நோய் எதிர்ப்பு தடுப்பூசியை செலுத்தியதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நோய் எதிர்ப்பு தடுப்பூசியை விடுதியில் உள்ள பல நோயாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த மருந்து தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இருப்பினும் விசாரணை முடிவடையும் வரை இந்த தடுப்பூசியை கொழும்பு தேசிய வைத்தியசாலை பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த நோயாளியின் பிரேத பரிசோதனை நாளை இடம்பெறவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
