கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பில் அதிகளவான கோவிட் தொற்றாளிகள் அடையாளம்
கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பில் அதிகளவான கோவிட் தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில்; 226 பேர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில் மொரட்டுவையில் 23பேரும் பிலியந்தலையில் 19 பேரும் அவிசாவளையில் 16பேரும், கொழும்பில் 15பேரும், கெஸ்பேவயில் 15பேரும்,வெள்ளவத்தையில் 12பேரும், பொரலஸ்கமுவையில் 11பேரும் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டு;ள்ளனர்.
10க்கும் குறைவானோர் கொள்ளுப்பிட்டி, நாரஹன்பிட்டி, பொரல்லை, அத்துருகிரிய, பத்தரமுல்லை, தெஹிவளை, எத்துல்கோட்டே, ஹோமாகம, கடுவல, கொலன்னாவ, கோட்டே, மஹரகம, கல்கிஸ்ஸை, நுகேகொட, பன்னப்பிட்டிய, ராஜகிரிய மற்றும் ரத்மலானை ஆகிய இடங்களில் பதிவாகினர்.
கம்பஹாவில் வத்தளையில், 10பேரும் மத்துமகல மற்றும் கிரிலேவ ஆகிய இடங்கள் உட்பட்ட பகுதிகளிலிருந்து 82பேர் தொற்றாளிகளாக பதிவாகினர்.
குருநாகலில் 44பேரும், மாத்தளையில் 61பேரும், களுத்துறையில் 52பேரும், கண்டியில்
47பேரும், மொனராகலையில் 45பேரும், காலியில் 44பேரும், பதுளையில் 30 பேரும்
தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.